புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு பாஜ தயாராகி வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாதம் 11 மாநிலங்களில் சுற்றுபயணம் செய்கிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 160 தொகுதிகளில் பாஜ வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த இடங்களை கைப்பற்றுவதற்கு வியூகம் வைத்து பாஜ செயல்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, பீகார் ,பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முக்கியமானவை. வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளை குறி வைத்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி வரும் 5ம் தேதி திரிபுராவில் அமித் ஷா பிரசாரத்தை தொடங்குகிறார். 6 ம் தேதி நாகலாந்து, 7ம் தேதி சட்டீஸ்கர், ஜார்க்கண்டில் பிரசாரம் செய்கிறார். மொத்தம், 11 மாநிலங்களில் அவர் பிரசாரம் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.