அமெரிக்காவில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் நான்கு மாதங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
பூங்காவில் காணாமல் போன சிறுவன்
ஜூவானோ முன்குயா என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் Sarg Hubbard பூங்காவிற்கு சென்றார்.
அங்கு தனது 5 வயது மகன் லூசியனை அவனது சகோதரனுடன் விளையாட விட்டார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது தனது மகன் லூசியன் காணாமல் போயிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜூவானோ குடும்பத்தினர் சில நாட்களாக அந்த பகுதியில் தீவிரமாக தேடினர்.
மேலும் Dive படையினர் மற்றும் பொலிஸ் நாய்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.
ஆனாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூவானோ தினமும் காலையில் பூங்காவிற்கு நடந்து சென்று, தனது மகனை கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்க்க நீர்நிலைகளில் அலைந்தார்.
நதியில் சடலமாக மீட்பு
இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி யாகிமா நதியில் இருந்து சிறுவனின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும் லூசியனின் மரணம் தற்செயலானது என்றும், நீரில் மூழ்கி உயிரிழந்ததையும் பொலிஸார் உறுதி செய்தனர்.
யாகிமா பொலிஸார் மேலும் கூறுகையில், ‘பிரேத பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், லூசியனின் மரணத்திற்கு வழிவகுத்த குற்றச் செயல்கள் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை’ என தெரிவித்தனர்.