தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன் அடிப்படையில் வரும் 9ம் தேதி பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
ஒரு நாளைக்கு 200 முதல் 250 நுகர்வோர்கள் பரிசுப் பொருட்கள் பெரும் வகையில் டோக்கன் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவை டோக்கனில் இடம்பெற்று இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நுகர்வோர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகைக்கு பெற்றவுடன் அதற்குரிய குறுஞ்செய்தியை குடும்ப அட்டைதாரர்களின் அலைபேசி எண்ணுக்கு அனுப்பும் நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.