இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இளைஞர்களில் சுமார் 32 சதவீதம் பேருக்கு வேலை இல்லை.இந்த சூழலில் தலைநகர் இஸ்லாமாபாத் போலீஸ் துறையில் 1,167 காவலர் காலியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஆனால் இந்த கல்வி தகுதியை தாண்டி பட்டதாரிகள் பலர் காவலர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு இஸ்லாமாபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிவேகமாக பரவி வருகிறது.
வெறும் 1,167 போலீஸ் பணிக்கு 32,000 பேர் தேர்வு எழுதியிருப்பது வேலையில்லா திண்டாட்ட அவலத்தை அம்பல மாக்கி இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.