இந்திய நாட்டையே பாஜக ஆட்சி செய்து வருகிறது. அதனால், பல அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்து வருகிறார்கள், நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது.
அதன் படி, தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சி இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக கட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு, சம உரிமை, மரியாதை போன்றவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருப்பதாவது: “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழக பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை ஒரு வித வலியுடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் இயங்கும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
கட்சியின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே முழு காரணம் ” என்று தெரிவித்துள்ளார்.