தங்களின் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், “கொரோனா காலத்தில் பணியமர்தப்பட்ட செவிலியர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து அவர்களுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் !
– மாண்புமிகு கழக இடைக்கால பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/v0907RxWdd
— AIADMK (@AIADMKOfficial) January 2, 2023
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தங்களுக்காக அவர் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தும் விதமாகவும் போராட்டத்தை தொடர்ந்து வரும் செவிலியர்களின் சேலம் மாவட்ட பிரதிநிதிகள் சிலர், நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர்.
அப்போது தங்களின் நிலை குறித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரல் கொடுக்கு வேண்டும் என நேரில் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி செவிலியர் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM