நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அறிவாளுடன் காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி பிரமிளா (32) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று இரவு மீண்டும் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ராஜா வீட்டில் இருந்த அறிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் அறிவாளுடன் சென்று நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்து மனைவியை கொலை செய்ததை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிர் இழந்த பிரமிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.