சென்னை: மருத்துவ கவுன்சில் தேர்தலில் வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டதாக கூறப்படுவதால் சரிபார்க்க வேண்டும். தகுதியுடைய மருத்துவர்களின் பெயர்கள், அவர்களின் முழு விவரங்களுடன் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.