காதலருக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் தமன்னா. 30 வயதைக் கடந்த தமன்னா பற்றி அடிக்கடி காதல், திருமண வதந்திகள் வருவது வழக்கம். அவரும் அதற்கு வழக்கம் போல மறுப்பு தெரிவிப்பார். ஆனால், இந்த முறை அப்படி மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாது. அவரது காதலருக்கு முத்தம் கொடுத்து புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி செய்தியாகிவிட்டது.

ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள விஜய் வர்மா என்பவர்தான் தமன்னாவின் காதலன். அவருடன் கோவாவில் தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார் தமன்னா. ஒரு பார்ட்டியில் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. 'பின்க், பாகி 3, டார்லிங்ஸ்' உள்ளிட்ட ஹிந்திப் படங்களில் நடித்துள்ளவர் விஜய் வர்மா. இருவரும் இதற்கு முன்பும் அடிக்கடி ஒன்றாக சுற்றியவர்கள்தான் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

தமன்னா வயதுயுடைய ஹீரோயின்கள் ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் விரைவில் தமன்னாவும் தனது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.