காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுல் வெளியிட்டு கடுமையான கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.
கே.எல் ராகுல் மீது கடும் விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 2023 புத்தாண்டு தினத்தில் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் கே.எல் ராகுலை விமர்சித்துள்ளனர்.
kl rahul twitter
ஒருவரின் பதிவில், பிரதர், நீங்கள் உங்கள் மனைவியுடனே இருங்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வர வேண்டாம்.
நீங்கள் அணிக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார்.
Brother, now you stay with your wife and don’t come back to the Indian cricket team because you are no longer needed in #Teamindia . You are the burden in the team.
— Rishabh Pandey (@rishabhpost) January 1, 2023
இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய…
இன்னொருவரின் பதிவில், தயவு செய்து 4-5 ஆண்டுகள் வரை திரும்ப வேண்டாம். இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய இதுவே சிறந்த வாய்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி பலரும் ராகுலை விமர்சித்து வருகின்றனர். இதனிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
Pls don’t return until 4-5 yrs . This would be your best chance to serve Indian cricket
— Bluefilter (@ItsMayank4u) January 1, 2023