ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித்தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.