கூடலூர்:முதுமலையில், காட்டு பன்றிகள் உயிரிழப்புக்கு, ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) பாதிப்பா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அதன் மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பகுதியில் நவ., மாதம், காட்டு பன்றிகள் ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) தாக்கி உயிரரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த ஒரு வாரத்தில் 20க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்து. நேற்று, இரண்டு பன்றிகள் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பன்றிகள் உடல்களில், ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) அறிகுறி தென்பட்டுள்ளதால், பிரேத பரிசோதனைக்கு பின், அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முகாமுக்குள் பன்றிகள் நுழையாமல் இருக்க, முகமை சுற்றி வண்ணத் துணிகளை கட்டியுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், ‘பந்திப்பூர் வனப்பகுதியில், காட்டு பன்றிகள் ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் காரணமாக உயிரிழந்தது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது இதனால், முதுமலை பகுதியில் பன்றிகள் உயிரிழப்புக்கு ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உறுதி செய்ய்படவில்லை. இதனால், அதன் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஓரிரு தினங்களில் அதன் முடிவுகள் வர வாய்ப்புள்ளது. மேலும், ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் பன்றியில் இருந்து பன்றிக்கு தான் ஏற்படும். மனிதர்களையும் மற்ற விலங்குகளை பாதிக்காது’ என, கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement