வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: சீனர்களை குறிவைத்து மட்டும் பல்வேறு நாடுகள் கோவிட் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சீனா, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா காரணமாக, அந்நாட்டில் கோவிட் பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. இதனால், அந்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், கோவிட் குறித்த சீனாவின் தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை என அந்நாடுகள் குற்றம்சாட்டி இருந்தன.
இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது; சில நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களை குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் ஏற்று கொள்ள முடியாதது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement