முட்டையில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை


நாட்டுக்கு முட்டையை இறக்குமதி செய்தவன் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு காரணமாக முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்

முட்டையினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை | Risk Of Virus In Egg Import

இது குறித்து  அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி  தெரிவிக்கையில்,

பறவைக் காய்ச்சல் இலங்கைக்குள் வருவதைத் தடுப்பதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் பெரும் பங்காற்றியுள்ளது.

கால்நடை மருத்துவர்கள், கால்நடை புலனாய்வு அதிகாரிகள், மற்றும் ஆய்வுக்குப் பிந்தைய நிறுவனங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து பறவைக் காய்ச்சலைத் தடுக்கின்றன.

இலங்கைக்குள் நுழைவதிலிருந்து, அதுபோன்ற நோய் இந்த நாட்டிற்கு வந்தால், அது மிகவும் சிக்கலாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.