கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள மான்ட்கோமெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் என்ஜினுக்குள் உறிஞ்சப்பட்ட விமானக் குழுவின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், இந்த அசாதரணமான விபத்து சனிக்கிழமை மாலை 3 மணிக்கு (உள்ளூர் நேரம்) நடந்தது. டல்லாஸில் இருந்து வந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விமான நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதன் இன்ஜின் ஒன்று இயங்கிக் கொண்டிருந்ததால், அதை அறியாத தொழிலாளி, அதன் அருகில் சென்றுள்ளார். அப்போது அதன் விசையினால் இழுக்கப்பட்டு இன்ஜினுக்குள் சிக்கிக் கொண்டார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான பீட்மாண்ட் ஏர்லைன்ஸில் பணிபுரிந்தார்.

மேலும் படிக்க | 9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 3408, Embraer E175 ட்வின் ஜெட் நிறுத்தப்பட்டிருந்த வளைவில் ஊழியர் கொல்லப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் நிர்வாக இயக்குனர் வேட் டேவிஸ் ஒரு அறிக்கையில், “AA/பீட்மாண்ட் ஏர்லைன்ஸின் குழு உறுப்பினரின் துயரமான இழப்பைப் பற்றி கேட்டு மிகவும் மனம் வருந்துகிறோம்” என்று கூறினார்.”இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அசாதரணமான இந்த சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் FAA ஆகியவற்றால் கூட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பூர்வாங்க அறிக்கை எதிர்பார்க்கப்படும் என்று NTSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த விபத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும், இந்த கடினமான நேரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆதரவையும் வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

விபத்தைத் தொடர்ந்து, மாண்ட்கோமெரி விமான நிலையம் வழியாக வெளியூர் செல்லும் மற்றும் உள்வரும் அனைத்து விமானங்களும் சிறிது நேரத்திற்கு தரையிறக்கப்பட்டன. பின்னர், மாண்ட்கோமெரி பிராந்திய விமான நிலையம் ட்விட்டர் பதிவில், இரவு 8:30 மணிக்கு (உள்ளூர் நேரம்) இயல்பான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

மேலும் படிக்க | நலிவடைந்த நிலையில் மண் பாண்ட தொழிலாளர்கள்! அரசிடம் வைத்துள்ள கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.