இயக்குனர் அமீருடனான நேர்காணல் தொடர்கிறது.
1.இப்பொழுது படம் பண்ணுவது சுலபமா? ஒரு இயக்குனராக உங்களின் கருத்து என்ன?
படம் பண்ணுவது மிகவும் சுலபம், ஒரு மொபைல் இருந்தால் போதும். படம் எடுத்துவிடலாம். ஆனால் அதை சந்தைப்படுத்துவது கடினம், இன்று சந்தை விரிவடைந்துள்ளது. அடையாளம் தெரிந்த ஒருவருடைய படத்தை தான் கார்ப்பரேட் கம்பெனிகள் விரும்புகிறது, கார்ப்பரேட் கம்பெனிகளை பொறுத்த வரையில் சந்தையில் லாபம் பார்க்கத்தான் நினைப்பார்கள். OTT யில் கூட நல்ல படத்தை வாங்குவதை விட, பெரிய நடிகர்களுடைய படங்களை வாங்குவதை தான் விரும்புகிறார்கள்.
2.இப்பொழுது இயக்குனர்களே நடிகராக மாறி வருகிறார்களே இதற்கு காரணம்?
அதற்கு காரணம் நடிகர்கள் தான். நடிகர்கள் வளர்ந்தப்பின் தன்னை தானே பிரம்மாவாக எண்ண ஆரம்பித்து விடுகின்றனர். இருவருக்குள்ளும் ஓர் முரண் வந்து விடுகிறது. அதனால் தான், இயக்குனர்களே நடிகராக மாறி வருகின்றனர். நாங்கள் உருவாக்கி வைத்தப்போக்கை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள். இது தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கிறது.
அஜித்துக்கு காமெடி நன்றாக வரும். ஆனால் அவர் தன்னை ஆக்ஷன் ஹீரோவா தான் காட்டி வருகிறார். அப்பொழுது ஒரு தன்மை போகிறது. அந்த ஒற்றை தன்மையுடன் நடிப்பதற்கு வியாபாரம் தான் காரணம். இங்கு நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. கதைக்கு அல்ல…. இந்நிலமை இப்பொழுது மாறி வருகிறது. அதற்கு உதாரணமாக ‘அசுரன்’, ‘ஜெய்பீம்’ சொல்லலாம்.
3. தீவிர அரசியல் பேசும் சினிமாக்கள் வர வாய்ப்பு இருக்கா?
‘பருத்தி வீரனுக்குள்ளே’ ஒரு அரசியல் இருக்கு. வெற்றிமாறன் கூட தமிழ் தேசிய அரசியலை தான் ‘விடுதலை’ என்று எடுத்து இருக்கார். என்னுடைய , ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தில் அரசியல் தான் பேசுகிறேன். ஆனால் அது வேறு வகை அரசியல்.
4. தமிழ்நாட்டில் இந்து – இஸ்லாமியர்கள் இடைவெளி அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா?
அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
5. இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் நீங்க இல்லாததற்கு காரணம் என்ன?
அரசியல் செய்வதற்கு நமது சுயமரியாதையை இழந்து விடுவோம். வெளியில் ஒன்று பேசுவோம், உள்ளே ஒன்று செயல்படுவோம். இது அரசியல் தன்மை, அரசியல் வாதிகளின் தன்மை இல்லை.
6. நீங்கள் கட்சி தனியாகத் தொடங்கலாமே?
இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட கட்சிகள் இருக்கிறது. முதலில் கட்சி தொடங்க ஏகப்பட்ட பணம் தேவைப்படும். அதற்கு நான் டொனேஷன் வாங்கத் தேவை வரும். அப்படி வாங்கும் நிலையில் அவருக்கு நான் கட்டுப்பட வேண்டும். அப்பொழுது நான் எப்படி அவனுக்கு எதிராக பேச முடியும்? உண்மையை பேச முடியாது. அரசியல் எனக்கு சரி வராது.
முழு வீடியோவையும் காண: