குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர், “பெரம்பலூர் மாவட்டத்தில் பலரிடம் பருவ குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அது சட்டப்படி மாபெரும் குற்றம். எனவே அவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும் அமர்த்துதல் போன்றவற்றை அரசு கண்டறிந்தால் பணியில் அமர்த்துபவர்கள் மீது நடவடிக்கையை எடுக்கப்படும்.
அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்