தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முறைசாரா தொழிலாளர்கள் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கிட வேண்டும்.
* பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
* வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.
* சாலையோர வியாபாரிகளுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை காலதாமதம் இன்றி உடனே வழங்கிட வேண்டும்.
* நல வாரியத்தில் உள்ள நிதியை தொழிலாளர் நலன்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதே போல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உள்ள தொழிலாளர் உதவி நல ஆணையர் அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.