பொங்கல் சிறப்பு பஸ்கள்; போக்குவரத்து துறை சூப்பர் திட்டம்!

தமிழ்நாட்டின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல் பண்டிகை தான். பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இந்த பண்டிகை பார்க்கப்படுகிறது.

இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம்.

இதனால் சென்னை பஸ் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதை சமாளிக்க ஆண்டுதோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடு கிடுவென உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,000 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 16,112 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று பிற ஊர்களில் இருந்து 5 நாட்களில் மொத்தம் 23193 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில் பயணிகள் படையெடுத்து செல்வார்கள். இதை கருதி ஆம்னி பஸ்களும் கட்டணத்தை உயர்த்தி விட்டன.

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,000 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.