அம்பாறை மாவட்ட திட்டமிடல் பதில் பணிப்பாளராக எச். பி. அனீஸ் நியமனம்

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். பி. அனீஸ் பதில் திட்டமிடல் பணிப்பாளராக, அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே. எம். ஏ டக்ளஸ் இன் முன்னிலையில் இன்று (03)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர் நிலந்த டி சொய்ஸா, உதவி மாவட்ட செயலாளர் விமங்ச செனவிரத்ன, அம்பாறை பிரதேச செயலக அனுருத்த சந்தருவன், பிரதான கணக்காளர் எஸ். எல். ஆதம்பாவா, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ், கணக்காளர் சந்தன வனசிங்க, நிருவாக உத்தியோகத்தர் சுஜீவ வீரசிங்க உட்பட பதவிநிலை அலுவலர்கள் மற்றும் செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.