தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணி வழங்க கோரி, கொரோனா களத்தில் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள், புத்தாண்டு அன்று தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
சேலம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இரண்டாம் நாளாக செவிலியர்கள் நேற்றும் போராட்டத்தை தொடங்கினர்.
இதனை அடுத்து போராடிய அனைவரையும் அப்புறப்படுத்திய போலீசர்கள், தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் சேலம் அரசு மருத்துவமனை முன்பாக மீண்டும் போராட்டம் செய்ய தொடங்கினர்.
இதனை அடுத்து செவிலியர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், மீண்டும் அதே தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.