புதுடெல்லி: உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சினில் முதல்முறையாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இமயமலையில் உள்ள சியாச்சின் தான் உலகின் மிக உயரமான போர்க்கள பகுதியாக கருதப்படுகிறது. முக்கிய பாதுகாப்பு களமாக உள்ள இங்கு வழக்கமாக ஆண் ராணுவ அதிகாரிகள் தலைமையில் தான் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் முதன்முறையாக தற்போது கேப்டன் ஷிவா சவுகான் அங்கு பாதுகாப்பு தலைமை பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
15,600 அடி உயரம் உள்ள குமார் போஸ்ட் பகுதியில் அவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பொறுப்பு ஏற்ற அவர் இனிவரும் 3 மாத கால அங்கு பணியில் இருப்பார். அவருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.