#BREAKING :: தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தொடங்கியது..!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்யும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவற்றில் சென்னையிலிருந்து மட்டும் 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தமிழக முழுவதும் இயக்கப்பட உள்ளது. 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவை தொடங்கி வைத்தார். பொங்கலுக்கான சிறப்பு பேருந்தில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக 94450 14450 மற்றும் 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோன்று ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749442, 044-2628445, மற்றும் 044-26281611 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.