இத்தாலியில் நேரலை நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரைத் தாக்கிய புலி அவரது கழுத்தைக் கடித்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
இத்தாலியின் Lecce மாகாணத்தில் கடந்த வியாழன் மாலை ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரை புலி தாக்கியது. சர்க்கஸ் பயிற்சியாளரை புலி இழுத்து தரையில் தள்ளி கழுத்தை கடித்த திகிலூட்டும் தருணத்தின் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது.
அசந்த நேரத்தில் தாக்கிய புலி
அந்த வீடியோவில், சர்க்கஸ் பயிற்சியாளர் மற்றொரு புலி மீது கவனம் செலுத்தும் நேரத்தில், இரண்டாவது புலி பின்னால் இருந்து அவர் மீது பாய்ந்தது.
Ivan Orfei என அடையாளம் காணப்பட்ட 31 வயது பயிற்சியாளர், வலியால் அலறி, புலியின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடும் போது, புலி அவரது கழுத்தில் கடித்தது. மேலும், புலி அதன் பற்களால் அவரது காலைத் துளைத்தது. இதற்கிடையில், பார்வையாளர்கள் பயத்தில் அலறினர்.
அதிர்ஷ்டவசமாக, ஓர்ஃபி புலியின் பிடியில் இருந்து தப்பினார், அவரது உதவியாளர் புலியை மேசையால் அடித்ததால், புலி தளர்ந்து போனது.
Incidente al Circo per #ivanorfei, attaccato alle spalle da una Tigre davanti ai bimbi del pubblico
Ricoverato in codice rosso#circo #Orfei pic.twitter.com/VgYDvuxkJT— SALLY (@LaSamy65280885) December 31, 2022
கழுத்து, கால் மற்றும் கைகளில் ஆழமான காயங்களுடன் அவர் Lecce’s Vito Fazzi மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்து தப்பிய அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், புலி, கால்நடை பரிசோதனைக்கு உட்படுத்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது.