உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் நாளிலேயே கைலியன் எம்பாப்பேவுடன் மீண்டும் இணைவதை லியோனல் மெஸ்ஸி தவிர்த்ததாக கூறப்படுகிறது.
அர்ஜென்டினாவுடன் 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு லியோனல் மெஸ்ஸி செவ்வாய்க்கிழமை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் பயிற்சிக்குத் திரும்பினார்.
35 வயதான அவர் கத்தாரில் தனது மகத்தான வெற்றிக்குப் பிறகு PSG-ல் 10 நாள் இடைவெளியை எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை Chateauroux-க்கு எதிரான Coupe de France மோதலுக்கு முன்னதாக தனது PSG கிளப்புக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
கத்தாரின் லுசைல் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்ததார், மேலும் பெனால்டி ஷூட்அவுட்டில் தனது வாய்ப்பையும் கோலாக மாற்றினார். இறுதியில், பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என்ற கணக்கில் கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.
இதையடுத்து, Ligue 1 லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை லென்ஸுக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து PSG அணியில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர், Mbappe-வுடன் மெஸ்ஸி பயிற்சியில் சேரமாட்டார் என்று அறிவிக்கப்பட்ட்டது.
Mbappe உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார், ஆனால் அணி வெற்றிபெறவில்லை. அது அவருக்கு சோகத்தை ஏற்படுத்தயது, மேலும் அவர் மெஸ்ஸியுடன் சற்று கோபமாக இருந்ததாக கூறப்பட்டது.
Getty
ஆட்டத்திற்கு முன்பே இருவரையும் சுற்றி சில பேச்சுக்கள் இருந்தன, குறிப்பாக எம்பாப்பேவின் முன்மாதிரி கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது தெரியவந்தது. மெஸ்ஸி அல்ல, ரொனால்டோ யாராலும் தொடக்கூட முடியாத ஜாம்பவான் என்று எம்பாப்பே நம்புகிறார் என்ற விடயங்களும் தெரியவந்தது.
ஆனால் மெஸ்ஸி தனது நாட்டிற்கு 36 ஆண்கள் கழித்து உலகக்கோப்பையை வென்று கொடுத்து தனக்கென தனி பெருமையை தேடிக்கொண்டார். எல்லா காலத்திலும் தான் ஒரு சிறந்த கால்ப்பந்தாட்ட வீரன் என்பதை அவர் உணத்தினார்.
இதனிடையே, ஒரே கிளப்பில் விளையாடும் மெஸ்ஸிக்கும் எம்பாப்பேவிற்கு இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளிவந்தாலும், அவர்கள் இருவரும் எந்த வெறுப்பையும் ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்டவில்லை.
மெஸ்ஸி இப்போது PSG பயிற்சிக்குத் திரும்ப உள்ளதால், அவர் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் இல்லை என்றாலும், போட்டிக்குப் பிறகு முதல் முறையாக Mbappe உடன் மீண்டும் இணைய வேண்டும்.
இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை Chateauroux-க்கு எதிரான Coupe de France மோதலுக்கு முன்னதாக மெஸ்ஸி செவ்வாய்கிழமை தனது PSG கிளப்புக்கு திரும்பினார். உடனடியாக பயிற்சிக்கு சென்று எம்பாப்பே உடனான நேரடி சந்திப்பை தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை மாலையில் PSG அடுத்த சவாலுக்குத் தயாராவதற்கு இன்று (புதன்கிழமை) அணி ஒன்றுகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெஸ்ஸி தனது மற்ற சக வீரர்களுடன் முழுப் பயிற்சிக்குத் திரும்புவதற்கு முன், வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் லேசான பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்.