“ஆமாம், எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5,000 வழங்க சொன்னோம்; ஏனென்றால்…" – அமைச்சர் பெரியகருப்பன்

“திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா பாதிப்பு இருந்ததால் பொங்கல் தொகுப்பில் ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டுகோள் விடுத்தோம்.”என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெரியகருப்பன்

ராணி வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவு மண்டபத்தில் வேலு நாச்சியாரின் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்.பி கார்த்தி சிதம்பரம், எம்.எல்.ஏ தமிழரசி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.பெரியகருப்பனிடம் “பொங்கல் பரிசுத்தொகை வங்கியில் வரவு வைக்கப்படுமா?” என்று கேட்டதற்கு, “பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி நியாய விலை கடைகளில் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக கரும்புகள் வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படாது. தமிழகத்தில்தான் கொள்முதல் செய்யப்படும்.” என்றவர்,

“திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா பாதிப்பு இருந்ததால் பொங்கல் தொகுப்பில் ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டுகோள் விடுத்தோம். பொங்கலுக்காக கொடுக்க சொல்லவில்லை. இப்போது அந்த சூழ்நிலை இல்லை” என்றார்.

கரும்பு

மேலும் தொடர்ந்தவர், “கால சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து துறைகளும் நவீனமாக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் கூட்டுறவுத்துறையும் நவீனமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.