மெரினா டூ பெசன்ட் நகர் பீச்: சென்னையில் அடுத்த மாஸ்… பறக்கப் போகும் ரோப் கார்!

சென்னை என்று சொன்னாலே மெரினா கடற்கரை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அடேங்கப்பா… எவ்ளோ பெரிய பீச்… ஜல்லிக்கட்டு போராட்டத்துல சும்மா தெறிக்க விட்டுருச்சுல… சன்டேனா மெரினா தான்பா என்று சொல்லக்கூடிய சென்னைவாசிகள் பலரை பார்க்கலாம். சென்னை வரை வந்தாச்சு. அப்படியே அந்த மெரினாவிற்கு போயிட்டு வந்துடலாம் என சுற்றுலா பயணிகளும் மறக்காமல் சொல்லி விடுவர்.

மெரினாவில் குவியும் மக்கள்அதுவும் பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கில் குவிந்து விடுவர். மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலேயே மாசுபாடும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் மெரினா கடற்கரையை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் வேலைகள் தவறாமல் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் மெரினாவில் ரோப் கார் பறந்தால் எப்படி இருக்கும்?
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிகடற்கரை ஓர சில்லென்ற காற்று. கீழே பெருங்கடல். மேலே ஆகாயம் என கவித்துவமான பயணம். இப்படிப்பட்ட கனவு நிஜமாகப் போகிறது. சென்னைவாசிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வேற லெவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயம் அரங்கேறவுள்ளது. இதற்கான வேலைகளில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல.
மத்திய அரசு திட்டம்உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் என மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவை வரப் போகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ஒரு இடத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான முதல்கட்ட வேலைகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.
மெரினா டூ பெசன்ட் நகர்முன்னதாக பல்வேறு கட்ட பொறியியல் ஆய்வுகள். அதன்பிறகு சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும். இதுமட்டும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் பழனிக்கு அடுத்தபடியாக ரோப் கார் சேவை கொண்ட இடமாக சென்னை மாறிவிடும். போக்குவரத்து நெரிசலற்ற இனிமையான பயணத்தை தரும்.
மேயர் பிரியா சொன்ன பதில்முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 104வது வார்டு கவுன்சிலர் செம்மொழி, முதல்முறை ரோப் கார் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கேட்டது நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை ரோப் கார் திட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பது தான். இதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று சிறப்பு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருந்தார்.
அடுத்தகட்ட திட்டம்மேலும் சென்னையின் புதிய போக்குவரத்து வசதியாக ரோப் கார் திட்டம் உருவாக வாய்ப்புள்ளது. இதை சென்னையின் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தலாம். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் இறுதி ஒப்புதல் பெற முயற்சி எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த விஷயம் மத்திய அரசு மூலம் வேறு வகையில் அரங்கேறப் போகிறது. இந்த திட்டத்திற்கான வரவேற்பை பொறுத்து சென்னை மாநகராட்சி அடுத்தகட்ட ஏற்பாட்டில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.