கர்நாடக மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஞானயோகேஸ்ரமா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த சித்தேஸ்வர் சுவாமி (81) சிறந்த ஆன்மீகவாதியாகவும், தேர்ந்த பேச்சாளராகவும் விளங்கினார். ஆன்மீகப் பணிகளுடன் ஏழை எளிய மக்களுக்காக பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றையும் நடத்தி வந்தார். இவரது மடத்துக்கு கர்நாடகா மட்டுமல்லாமல் ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் சித்தேஸ்வர் சுவாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கடந்த ஒரு வாரமாக மடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தேஸ்வர் சுவாமி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று மாலை ஞானயோகேஸ்ரமா மடத்தில் சித்தேஸ்வர் சுவாமியின் உடல்தகனம் செய்யப்பட்டது. இவரதுமறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.