உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் உடையது. இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன், கொடுங்குளிருடனும் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில் சியாச்சினில் முதல்முறையாக, கேப்டன் சிவா சவுகான் என்ற இந்திய பெண் ராணுவ அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அங்குள்ள குமார் என்ற காவல் நிலையில், 3 மாத காலத்துக்கு அவர் பணியில் இருப்பார்.
‘Breaking the Glass Ceiling’
Capt Shiva Chauhan of Fire and Fury Sappers became the first woman officer to be operationally deployed in Kumar Post, post completion of arduous training, at the highest battlefield of the world #Siachen.#SuraSoi@PMOIndia @DefenceMinIndia @adgpi pic.twitter.com/nQbmJxvLQ4
— @firefurycorps_IA (@firefurycorps) January 3, 2023
ராணுவ என்ஜினீயர்கள் பிரிவைச் சார்ந்த சிவா சவுகான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது 11 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். ராணுவப் பணியில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றவர்.
சியாச்சின் சிகரத்தில் பணிபுரியும் முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகான்தான். அவருக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Excellent news!
I am extremely happy to see more women joining the Armed Forces and take every challenge in stride. It is a an encouraging sign. My best wishes to Capt Shiva Chauhan. https://t.co/M9d7Rw7kSj
— Rajnath Singh (@rajnathsingh) January 3, 2023
newstm.in