பெஷாவர் : பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்கு ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மாகாண கவர்னர் ஹாஜி குலாம் அலியும் முதல்வர் மெஹ்முத் கானும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement