பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் நெட்ஃபிளிக்ஸ் தொடர் பார்வையாளர்களை ஈர்க்காதது அவர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன உளைச்சலில் ஹரி- மேகன்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி இரண்டாவதாக வெளியிட்டுள்ள நெட்ஃபிளிக்ஸ் தொடர் Live to Lead மொத்தமாக தோல்வியடைந்தது என்றே கூறப்படுகிறது.
முதன்மையான 100 தொலைக்காட்சி தொடர்கள் என்ற வரிசையிலும் இடம்பெறவில்லை என்பதால், ஹரி- மேகன் தம்பதி கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
மேலும், குறித்த தொடருக்கு இணை தயாரிப்பாளர்களாகவும், தொகுப்பாளர்களாகவும் ஹரி- மேகன் தம்பதி செயல்பட்டுள்ளனர்.
ஆனால் உரிய விளம்பரம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும், சாதாரண பார்வையாளர்களை ஈர்க்கும் அவர்களது முதல் நடவடிக்கை உரிய இலக்கை எட்டவில்லை என்றே இதில் இருந்து புரிந்துகொள்ளலாம் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பெயருக்கு பெரிதான ஈர்ப்பு இல்லை
உரிய முறையில் சந்தைப்படுத்த தவறியதாலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்கள் கருதுவது போல் ஹரி- மேகன் தம்பதியின் பெயருக்கு பெரிதான ஈர்ப்பு எதுவும் இல்லை எனவும் ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
@getty
இதனிடையே, ஹரி- மேகன் தம்பதி ஒன்றும் ஊரறியும் பெரிய தலைவர்கள் ஒன்றும் அல்ல எனவும் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறியவர்கள், பிரித்தானியாவில் இருந்தும் வெளியேறியவர்கள், உண்மையில் அவர்களின் தொடர் எனக்கு ரசிக்கும்படியாக ஈர்க்கவில்லை என ராஜகுடும்பத்து விசுவாசி ஒருவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.