பெண் பயணியின் இருக்கையில் போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பற்றி நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த நவம்பர் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா (AI102) விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த அருவருக்கத்தக்க செயல் குறித்து பாதிக்கப்பட்ட முதிய பெண் பயணியின் மகள் இந்திராணி கோஷ் ட்விட்டரில் வருத்தத்துடன் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களையும் டேக் செய்திருக்கிறார்.
An inebriated male passenger urinated on a female co-passenger in Air India’s business class on Nov 26, 2022
Air India has lodged a police complaint regarding the incident which took place on Nov 26 when the flight was on its way from JFK (US) to Delhi: Air India official to ANI pic.twitter.com/XE55X6ao0b
— ANI (@ANI) January 4, 2023
அதில், “டின்னர் உணவு முடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி வந்த அந்த பயணி, என் அம்மாவின் இருக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கும், அருவருப்புக்கும் ஆளாகியிருக்கிறார் என் தாய்.
என் அம்மா புகார் தெரிவித்ததை அடுத்து அவருக்கு வேறு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்படியொரு அசிங்கமான வேலையை செய்த அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லி வந்ததும் சாதாரணமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்” என பொங்கியிருக்கிறார்.
#UPDATE | We are seeking a report from the Airline and shall take action against those found negligent: Directorate General of Civil Aviation
— ANI (@ANI) January 4, 2023
இந்த ட்விட்டர் பதிவு மத்திய விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கவனத்துக்கு சென்றதை அடுத்து, “உங்கள் தாய்க்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இயக்குநரகத்துக்கு அறிக்கையை வழங்கவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெண் பயணிக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பேசியிருக்கும் ஏர் இந்தியா தரப்பு, நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM