சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழக அரசின் நடவடிக்கையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்கும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.