ராகுல் காந்தியின் உன்னத பணி வெற்றியடையும்; ராமர் கோயில் தலைமை பூசாரி கடிதம்.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, கடந்த மாதம் 24ஆம் தேதி டெல்லி சென்றது. அன்று மாலை செங்கோட்டையில் பேரணி நிறைவடைந்தது.

இதையடுத்து, குளிர்காலத்தையொட்டி 9 நாட்கள் நடைபயணத்துக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் இருந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டிலிருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் யாத்திரை, லோனி நகரம் சென்று காசியாபாத் வழியாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் இன்று பிற்பகலில் நுழைந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி நகரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவரும் கைரானா, ஷாமிலியின் பல பகுதிகளைத் தொட்டு பாக்பத் வழியாக நடைபயணம் மேற்கொண்டனர். அம்மாநிலத்தில் ராகுலின் நடைபயணத்தில் பிரியங்காவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் கோயிலின் தலைமை பூசாரி, ராகுல் காந்தியை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் எழுதிய கடிதத்தில்,‘‘பகவான் ஸ்ரீராமர் ராகுல் காந்தியுடன் எப்போதும் இருப்பார். நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த பேரணி செல்லும் ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

சில காங்கிரஸ் தலைவர்கள் என்னை யாத்திரையில் கலந்து கொள்ள அழைத்தார்கள். ஆனால் உடல்நிலை காரணமாக என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. ராகுல் நீங்கள் நாட்டின் மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காக ஒரு உன்னத பணியை மேற்கொண்டு வருகிறீர்கள். அப்பணி வெற்றியடைய பிரார்த்திக்கிறேன்’’ என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வணிக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்; மத்திய அரசின் புத்தாண்டு பரிசு.!

150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள பாதயாத்திரையானது, தற்போது 110 நாட்களில் சுமார் 3,000 கிமீ கடந்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதி ஹரியாணாவிற்குள் மீண்டும் நுழைந்து பஞ்சாப் வழியாக பயணித்து வரும் 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.