சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமானது என அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு பிறப்பித்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகிறது உலக செய்திகளின் தொகுப்பு,