பாட்னா: பீகாரில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தேர்வர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பீகாரில் கடந்த டிசம்பர் மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 3-ம் நிலை ஊழியர்களுக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அதன் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், அதிருப்தி அடைந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பீகார் மாநில அரசை கண்டித்து தலைநகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் பேரிகாட் வைத்து தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார் அவர்களை லத்தியால் தாக்கி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.