பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக, வலுவான வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக திறைசேரியில் இருந்து 350 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
இதேபோன்று அரச வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடனை பெற்றுக் கொள்ள .எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான அமைச்சரவை ஆவணம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நெல் கொள்வனவின் போது நிலையான விலையை முன்னெடுத்து நெல் விவசாயிகளுக்கு நியாயமான செயற்பாட்டை உறுதி செய்வதே நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் போன்றே நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்க கூடியதாக இருக்கும் என்றும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மேலும் தெரிவித்தார்.