டெல்லி: கடந்த ஜூலையில் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இதுவரை மனு தாக்கல் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழுவுக்கு எதிராக மனுத்தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.