மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவரை, திமுக எம்எல்ஏ., கழிவு நீர் சாக்கடை அடைப்பை கைகளால் சுத்தம் செய்யச் சொன்ன விவகாரத்தில், சறறமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “சென்னை ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் 3.1.2023 அன்று, மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவரை, கழிவு நீர் சாக்கடை அடைப்பை தன் கைகளால் சுத்தம் செய்யச் சொன்ன அவலம் அரங்கேறியுள்ளது.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற இருமாப்பில் செயல்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய சட்டப் பிரிவுகளின்படி நடவடிக்கை வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல் அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “எந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார உபகரணங்களும் இல்லாமல் ஒரு பணியாளர் வேலை செய்வதை அருகில் இருந்து மேற்பார்வையிட்டதும் தவறு.
நான் கையை விட்டு கிளீன் பண்ணட்டுமா என்று அவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததும் தவறு. ஊழியர்களுக்கு பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளது.