புதுடில்லி, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட எலும்பு மற்றும் முடி மாதிரிகளை வைத்து, கொலையான பெண் ஷ்ரத்தா வாக்கர் என்பதை புதுடில்லி போலீசார் உறுதி செய்தனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர், 28, என்ற பெண், காதலன் அப்தாப் அமின் பூனாவாலா உடன் புதுடில்லியில் வசித்து வந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவை அவரது காதலன் பூனாவாலா கடந்த மே மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக அறுத்து, வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்தார். பின் இவற்றை புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்மாக வீசி எறிந்து அப்புறப்படுத்தினார்.
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த படுகொலையை செய்த அப்தாப் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மற்றும் முடி ஆகியவற்றின் மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக தெலுங்கானாவின் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த மாதிரிகள் மறைந்த ஷ்ரத்தாவின் தந்தை மற்றும் சகோதரரின் மரபணுவுடன் ஒத்துப் போவதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement