விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பறக்க தடை விதித்த ஏர் இந்தியா


நியூயார்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், சிறுநீர் கழித்த பயணிக்கு ஏர் இந்தியா 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

விமானத்தில் பயணிக்க தடை

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த பயணி மீது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் வணிக வகுப்பில் அமர்ந்திருந்த 70 வயது மதிக்கத்தக்க பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவத்தை ஏர் இந்தியா உறுதி செய்ததது.

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பறக்க தடை விதித்த ஏர் இந்தியா | Passenger Urinated On Woman Air India Flight Ban  

நவம்பர் 26-ஆம் திகதி ஏர் இந்தியா விமானம் AI 102 நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

போதையில் செய்த காரியம்

விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் இருக்கைக்கு சென்று, பேண்ட் ஜிப்பை அவிழ்த்துவிட்டு சிறுநீர் கழிக்க தொடங்கினார்.

அவர் சிறுநீர் கழித்த பிறகும், சக பயணிகளில் ஒருவர் அவரை அங்கிருந்து செல்லும்படி கூறும் வரை அங்கேயே, ஜிப்பை மூடாமல் கூட நின்றதாக கூறப்படுகிறது.

இந்த செயலுக்காக அந்த நபர் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் பாதிக்கப்பட்ட பெண், ஏர் இந்தியாவின் குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியதை அடுத்து, இந்த விவகாரம் பெரிதானது.

சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, சிறுநீர் கழித்த நபர் மீது ஏர் இந்தியா வழக்குப் பதிவு செய்து, அவரை விமானத்தில் பறக்க தடை பட்டியலில் சேர்க்க பரிந்துரைந்தது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.