தொலைக்காட்சி விளம்பர நடிகையை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சீயஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் விஜய். இவருக்கும் நகைக் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட சிறு சிறு விளம்பரங்களில் நடிக்கும் திருமணமான 26 வயது இளம் நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தில் ஆட்டோ ஓட்டுநர் விளம்பர நடிகையை ஆசை வார்த்தை கூறி விஜய் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டில் இருந்த நண்பர்களான சாம்ராஜ் மற்றும் சதீஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விளம்பர நடிகைக்கு மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து வந்த விளம்பர நடிகை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுனர் விஜய் மற்றும் அவரது நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.