புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் பராப்(58) 3 முறை சிவசேனா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அனில் பராப், ரத்னகிரி மாவட்டத்தின் டபோலியில் ரிசார்ட் கட்டுவதில் கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறி, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் அனில் பராப்புக்கு சொந்தமான ரூ.10கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.