மெஸ்ஸியை பார்த்து முறைத்துக்கொண்டு முகத்தில் ஒருவித வெறுப்புணர்ச்சியுடன் வரவேற்ற கைலியின் எம்பாப்பேவின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே.
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு PSG அணிக்கு திரும்பிய அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸிக்கு PSG-ன் ஆலோசகர் Lluis Campos சிறப்பு நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார்.
கைலியின் எம்பாப்பேயின் சகோதரர் ஈத்தன் எம்பாப்பே
PSG அணியுடன் இணைந்த லியோனல் மெஸ்ஸியை அனைவரும் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றபோது, ஒருவர் மட்டும் மெஸ்ஸியை சற்று முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
முகத்தில் சிரிப்பு இல்லாமல், மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் வெறுமனே கைதட்டி மெஸ்ஸியை வரவேற்ற ஒருவர், அவர் வேறு யாரும் அல்ல, கைலியின் எம்பாப்பேயின் இளைய சகோதரர் ஈத்தன் எம்பாப்பே (16).
அவரது முக பாவனைகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை பார்க்கும் PSG ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். “ஈதன் எம்பாப்பேவின் முகம் அனைத்தையும் சொல்கிறது. புன்னகை இல்லை,” என்று ஒருவரும், “மெஸ்ஸியைப் பார்க்க ஈதன் எம்பாப்பே வாயடைத்துப் போனார்…” என்று மற்றோருவரும் எழுதினார்.
மூன்றாவதாக ஒருவர் எழுதினார்: “ஈதன் எம்பாப்பேவின் எதிர்வினை மிகவும் வேடிக்கையானது. அவர் மெஸ்ஸியுடன் கைகுலுக்க இங்கு வரவில்லை.” என்று பதிவிட்டார்.
🎥🔙
Vivez le retour à l’entraînement de 𝙻𝚎𝚘 𝙼𝚎𝚜𝚜𝚒 en vidéo ! ⤵️ pic.twitter.com/9q7kVO9ryH
— Paris Saint-Germain (@PSG_inside) January 4, 2023
ஏற்கெனவே, PSG அணியில் சக வீரரான மெஸ்ஸியை வரவேற்க கைலியின் எம்பாப்பே அங்கு இல்லை. பயிற்சியில் இருந்த அவரது சகோதரரின் முக் அமைப்பு பலவற்றை தெரிவிக்கிறது.
முன்னதாக, செவ்வாய்கிழமை கிளப்பிற்கு திரும்பிய மெஸ்ஸி, கையிலியன் எம்பாப்பேவுடன் உடனடியாக நேரடி சந்திப்பை தவிர்க்க விரும்பினார் என்ற செய்திகளும் வெளிவந்தன.
நியூயார்க் சென்ற கைலியின் எம்பாப்பே
ஞாயிற்றுக்கிழமை லென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் PSG தோல்வியை சந்தித்ததையடுத்து, சிலருக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதில் கைலியின் எம்பாப்பேவும் ஒருவர்.
உலகோப்பைக்கு பிறகு PSG அணியில் உடனடியாக இணைந்ததால், இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்ட கைலியின், சக PSG வீரரான அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க்கில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியை காண சென்றுள்ளார்.