பருவத மலை கோவிலுக்கு சாலை வசதி… ட்ரோன்கள் மூலம் தமிழக அரசு ஆய்வு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென் மகா தேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரம் உள்ள பருவதமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற மன்னரால் கட்டப்பட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர் உடனுறை பிரம்மராம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தளத்தில் லிங்கம் மற்றும் அம்மனுக்கு பக்தர்களே அபிஷேகம் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். 

பருவதமலையில் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி இரவு தங்கி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பருவத மலையில் மீது ஏற கரடு முரடான பாதையில் செங்குத்தான மலைப்பாதை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த மலையின் மீது ஏறும்போது சில பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கவும் செய்கின்றனர். 

இதன் காரணமாக பர்வத மலைக்கு வாகனங்கள் மற்றும் ரோப் கார் உதவியுடன் மலை உச்சிக்கு பக்தர்கள் செல்லும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி பாதையை அமைப்பதற்கான வழிதடத்தை கேமரா பொருத்திய ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் இந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் அன்பரசன் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.