பண்டா : உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு, துாக்கு தண்டனை விதித்து ‘போக்சோ’ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள மார்கா கிராமத்தில் வசித்தவர் ராம்பஹதூர் பிராஜாபதி, 45. கடந்த 2021ல், இவரது வீட்டின் அருகே வசித்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு, போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராம்பஹதூர் பிரஜாபதிக்கு துாக்கு தண்டனை விதித்ததுடன், 2.70 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement