வந்தது தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் – முழு விவரம் இதோ…!

Tamilnadu Final Voter List : சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியாட்டார். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 66 பேர் என்றும் பெண் வாக்காளர்கள்
3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினித்தவர் 8 ஆயிரத்து 27 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தொகுதி நிலவரம்

அதிக வாக்காளர் உள்ள தொகுதி சென்னையின் சோழிங்கநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 பேர் உள்ளனர். அதற்கு அடுத்த தொகுதியாக கோவை கவுண்டம்பாளையத்தில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 408 பேர் இருக்கின்றனர்.  

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி சென்னையின் துறைமுகம் தொகுதி. அங்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 பேர் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 310. மேலும், புதிய வாக்காளர்களான 18, 19 வயதுக்குட்பட்டவர்கள் 4 லட்சத்து 66 ஆயிரத்து 374 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க elections.tn.gov.in என்ற  இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 3 கோடியே 82 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

அதிமுக விவகாரம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு,”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மறைவின் விவரங்கள் இன்று கிடைத்தவுடன் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதிமுகவிற்கு மெசஞ்சர் மூலமாகவும், தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்ல, அந்த தகவலையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம்.  அதன் பிறகாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. தேர்தல் ஆணையம் கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.