பிரித்தானியா முழுவதும் பரவும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


கொரோனா தொற்றின் புதிய திரிபான அதிவேகத்தில் பரவக்கூடிய கிராகன் ஏற்கனவே பிரித்தானியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிராகன் என்ற புதிய திரிபு

2019 ஆம் ஆண்டில் நாட்டை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருந்த கொரோனா தொற்றுநோயானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும்,
உலக சுகாதார அமைப்பு தற்போது கிராகன் என்ற புதிய திரிபு தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதும் பரவும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் | Ultra Transmissible Strain Kraken Sweeps Uk

@getty

XBB.1.5 என குறிப்பிடப்படும் இந்த கிராகன் திரிபானது, இதுவரை ஆதிக்கம் செலுத்திய வகைகளை விடவும் நிகவும் ஆபத்தானது என கூறுகின்றனர்.
மேலும், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சில நாடுகளில் அதன் வளர்ச்சி தன்மை குறித்து கவலைகொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இந்த கிராகன் தொற்றானது தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகமாக பரவும் வாய்ப்புகள் அமைந்தால், இந்த தொற்றானது அதிகமாக உருமாறும் வாய்ப்புகளும் உள்ளது என்றார்.

நாட்டில் 37,000 பேர்களுக்கு கொரோனா

ஜனவரி 2ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையில் 8% அளவுக்கு கிராகன் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதும் பரவும் கிராகன்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் | Ultra Transmissible Strain Kraken Sweeps Uk

@getty

நியூயார்க் பகுதியை பொறுத்தமட்டில், மருத்துவமனையை நாடும் பெரும்பாலானவர்கள் கிராகன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், முதியவர்கள் தான் அதிகம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் சமீபத்திய தரவுகள் எதும் வெளியாகவில்லை என்றாலும்,
கடந்த வாரம் வரையில் நாட்டில் 37,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.