உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் அரசு ஊழியர் ஒருவர் ட்ரக் மோதி உயிரிழந்து, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அரசுப்பணியாளர் ஒருவர் பாண்டா மாவட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ட்ரக் ஒன்று அவர்மீது மோதியது. அதில் நிகழ்விடத்திலேயே பெண் உயிரிழந்தார்.
வாகனம் மோதியதை கவனிக்காத ஓட்டுநர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ட்ரக்கை ஓட்டிச் சென்றார். ஒருகட்டத்தில் இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியதால், ட்ரக்கிலும் தீப்பற்றியது. அதன்பின்னர் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர் இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் ட்ரக் ஓட்டுநரை கைது செய்தனர். கடந்த சில நாட்களில் உபி – டெல்லி சாலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது 3ஆவது முறை.
முன்னதாக டெல்லியில் அஞ்சலி சிங் என்ற பெண் காரில் சுமார் 10 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதே போல கௌஷம்பி – நொய்டா இடையேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் உணவு டெலிவரி செய்யும் ஆண் உயிரிழந்தார்.
இப்படி அடிக்கடி கொடூரமான முறையில் விபத்துகள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in