சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என தமிழகஅரசுக்கு ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தொடர்பான வழக்கில், கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர […]